ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள அமெரிக்க பிணைக்கைதி ஒருவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளதாக அவர் எழுதிய கடிதம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக சர்வதேச நாடுகள் நடத்தும் வான்வழி தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரவாதிகள் தொடர்ந்து தலை துண்டிப்புகளை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் பிரித்தானிய பிணைக்கைதி ஆலன் ஹென்னிங்ஸ் (Alan Hennings) என்பவரின் தலை துண்டித்து தீவிரவாதிகள் வெளியிட்ட காணொளியின் இறுதியில் தங்களிடம் மற்றொரு பிணைக்கைதியாக உள்ள அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான பீட்டர் கஸ்சிக் (Peter Kassig Age-26) என்பவரை அடுத்து கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஆனால் இந்த பீட்டர் கஸ்சிக் இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாகவும், அதுபற்றி கடந்த யூன் மாதம் தனது பெற்றோருக்கு கடிதம் ஒன்றை எழுதியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கடிதத்தில் இவர் கூறியதாவது, நான் சிரியாவை சேர்ந்த மற்றொரு பிணைகைதியுடன் தனி ஒரு அறையில் அடைக்கப்பட்டுள்ளேன். எனக்கு மரணம் மீது மிகுந்த அச்சம் உள்ளதால் நான் அப்துல் ரஹ்மான் (Abdul Rehman) என எனது பெயரை மாற்றிக் கொண்டு இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளேன்.
தினமும் 5 வேளை தொழுகை நடத்துவது மட்டுமின்றி கடந்த ஆண்டு ரமலான் நோன்பு மேற்கொண்டேன்.ஆனால் நான் இங்கிருந்து விடுபடுவேனா? என்ற நம்பிக்கை இல்லை என கூறியுள்ளார்.
இந்த கடிதத்தை அவரது பெற்றோர் செய்தியாளர்களிடம் காண்பித்துள்ளனர். மேலும் இவர் சிரியாவின் இராணுவ முகாமில் சமூக சேவை செய்து வந்தபோது, கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 1ம் திகதி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார் என கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment