உக்ரைனில் பச்சை பசேல் என்று மரங்களால் சூழப்பட்டு காதலர்களை ஈர்க்கும் சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது.
உக்ரைன்(Ukraine) நாட்டில் உள்ள க்ளெவன்(Klevan) என்னும் இடத்தில் பச்சை மரங்களால் 3 கி.மீ தூரத்திற்கு சூழ்ந்துள்ள ரயில் சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது.
காதலின் சுரங்கம் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ரயில் சுரங்கம் பெரும்பாலான காதலர்கள் வந்து செல்லும் சுற்றுலா பகுதியாக தற்போது விளங்குகிறது.
அருகில் உள்ள தொழிற்சாலை ஒன்றிற்கு மரங்களை ஏற்றி செல்ல பயன்படும் இந்த சுரங்கத்தில் ஒரு நாளுக்கு 3 வேளைகள் ரயில்கள் செல்லும்.
பச்சை பசேலென மரங்களால் முற்றிலும் கவரப்பட்டு இருப்பதால் இந்த சுரங்கம் பெரும்பாலான இளம் காதல் ஜோடிகளை கவர்ந்து இழுக்கின்றது.
மேலும், இந்த அழகிய இயற்கை சுரங்கத்திற்கு தங்கள் இணையுடன் வரும் காதலர்கள் தங்கள் மனதில் விரும்பும் ஆசைகள் நிறைவேறுவதாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.

0 comments:
Post a Comment