ஆக்ரோஷமாகும் கடல் நீர் மட்டம்! நிரப்பரப்பை விழுங்கிவிடுமா?

இதுவரை காலமும் இல்லாத வகையில் கடல் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

6,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 150 ஆண்டுகளாக கடல் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடல் நீர் மட்டம் குறித்து அவுஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் கர்ட் லம்பெக் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், கடந்த 35 ஆயிரம் ஆண்டுகளின் கடல் நீர் மட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

பல ஆயிரம் ஆண்டுகளாக, அதிகபட்சம் 20 சென்றிமீற்றருக்கு அதிகமாக கடல் நீர் மட்டம் உயரவில்லை.

கடந்த 6,000 ஆண்டுகளாக கடல் நீர் மட்டத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை, ஸ்திரமாகவே இருந்தது. ஆனால் 150 ஆண்டுகளுக்கு முன், கடல் நீர் மட்டத்தில் மாற்றம் ஏற்படத் துவங்கியது.

உலக நாடுகள் பலவற்றில் தொழில்மயம் ஏற்படத் துவங்கியதை அடுத்து, கடந்த 150 ஆண்டுகளாக ஆண்டுக்கு சில மில்லி மீற்றர் கடல் மட்டம் உயரத் தொடங்கியது.

இத்தகைய மாற்றத்தை 150 ஆண்டுக்கு முந்தைய பதிவுகளில் காண முடியவில்லை. கடல் அலைகளின் உயரமும், முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்து உள்ளது. கடல் மட்டம் உயர்வதற்கும், வெப்பநிலை உயர்வதற்கும் தொடர்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment