ஈராக்கின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் முன்னெடுத்து வரும் தாக்குதல்களை ஈடுகொடுக்க முடியாமல் அந்நாட்டு இராணுவத்தினர் திணறி வருகின்றனர்.
ஈராக்கின் பெரும்பாலான நகரங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். தற்போது அன்பர் மாகாணத்தில் முற்றுகையிட்டு நகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.
அவர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த இராணுவம் கடுமையாக போராடி வருகிறது. அங்கு இயூபிரேட்ஸ் ஆற்றின் கரையில் ஹீத் என்ற நகரம் உள்ளது.
அதை முற்றுகையிட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இராணுவம் அங்குள்ள ஆசாத் முகாமில் தங்கியிருந்து தாக்குதல் நடத்தியது. ஆனால் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இராணுவத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை.
இதற்கிடையே ஹீத் நகரின் மைய பகுதியை தீவிரவாதிகள் ஆக்கிரமித்தனர். எனவே ஹீத் நகரை தீவிரவாதிகளுக்கு ஈராக் ராணுவம் விட்டுக் கொடுத்து தாரை வார்த்தது.
ஆசாத் முகாமில் இருந்து வெளியேறி வேறு இடத்துக்கு சென்று விட்டது. ஆசாத் முகாம் வடமேற்கு ஹீத் பகுதியில் உள்ள மிகப் பெரிய முகாம் ஆகும்.
இதன் ஒரு பகுதி இன்னும் ஈராக் அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது, இது பாலைவனத்தால் சூழப்பட்டது.
எனவே அது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சவாலாக இருந்தது, இருந்தும் அதை தீவிரவாதிகள் முறியடித்துள்ளனர்.

0 comments:
Post a Comment