பிரான்ஸில் உள்ள ஈபிள் கோபுரம் தற்போது கண்ணாடி தரை போடப்பட்டு புது பொலிவுடன் திறக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் புகழ்பெற்ற 325 அடி உயரம் கொண்ட ஈபிள் கோபுரத்தில் புதிதாக போடப்பட்டுள்ள கண்ணாடி தரையின் மூலம் கீழே உள்ள 57 சதுர அடி பரப்பளவை கண்டு ரசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புது முயற்சி பல மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
30 மில்லியன் யூரோக்கள் செலவில் இரண்டு ஆண்டுகளாக கட்டப்பட்டுள்ள இந்த கண்ணாடி தரையில் கடைகள், ஹொட்டல், மற்றும் அருங்காட்சியம் அனைத்தும் அமைந்துள்ளது.
மேலும், 125 வருட பழமை வாய்ந்த இந்த கோபுரம் கடந்த 2013ம் ஆண்டு சுற்றுலா பயணிகளால் சுமார் 73 மில்லியன் யூரோக்கள் வருவாய் திரட்டியது குறிப்பிடத்தகக்து.

0 comments:
Post a Comment