பிரித்தானியா நாட்டில் இரட்டை பிறவி சிறுவர்கள் இருவரும் தங்களின் புகைப்படங்களால் இணையதளத்தை கலக்கி வருகின்றனர்.
பிரித்தானியாவின் கிழக்கு லண்டனை சேர்ந்த மைக்கில் (Micheal and Danial) மற்றும் டேனியல் என்ற மூன்று வயது இரட்டை பிறவி சிறுவர்கள் இணையதளத்தில் தங்களின் புகைப்படங்களால் அனைவரையும் கவர்ந்து வருகின்றனர்.
இவர்களின் தாயார் ஜேன் இவர்களை ஒரே மாதிரியான சீருடையில் அலங்கரித்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் என்ற சமூக வளைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதனை அடுத்து தற்போது டூ யங் கிங்ஸ் என்ற இவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்கை 33,470 நபர்கள் பின்பற்றுகின்றனர்.
இதுகுறித்து இவரது தாயார் ஜேன் கூறுகையில், இவர்கள் இருவரை வெளியே அழைத்து சென்றால் அனைவரும் வைத்த கண் எடுக்காமல் ரசிப்பதாகவும், பலர் புகைப்படம் எடுத்து கொள்ள ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.





0 comments:
Post a Comment