கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவில் இளைஞனொருவன் சிறுத்தையின் கூண்டில் சிக்கிக்கொண்டு தப்பிக்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் மிகவும் பரவலாக பேசப்பட்டது. அனைத்து உள்ளங்களை சஞ்சலப்படுத்திய விடயம் இது. இதே போன்ற இன்னுமொரு சம்பவம் நேற்றுமுன் தினம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் லைட் ரொக் மிருகக்காட்சி சாலையிலுள்ள சிறுத்தைக் கூண்டுக்குள் சிறுவன் ஒருவன் விழுந்து, தாக்கப்பட்டு, பலத்த காயங்களோடு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தந்தை மற்றும் தாத்தாவுடன் மிருககாட்சிசாலைக்கு சென்றுள்ளான் இந்த சிறுவன், 16 அடி உயரமான கூண்டின், பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த கம்பிகளுக்கு மேல் சிறுவனை அமரவைத்து, தந்தை புகைபடங்கள் எடுத்துக்கொண்டிருக்கையில், கால் தடுமாறி சிறுவன் கூண்டிற்குள் விழுந்துள்ளான்.
கூட்டிலிருந்த இரு சிறுத்தைகளும், சிறுவனின் கழுத்திலும், காலிலும் கடித்துள்ளது. உடனடியாக அந்த இடத்திற்கு வந்த பாதுகாப்பு படையினர், தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்தி சிறுத்தைகளை அந்த இடத்திலிருந்து துரத்தியுள்ளனர். உடனடியாக செயல்பட்ட பாதுகாப்புத் தரப்பினர் சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் சிறுவனுக்கு பலத்த காயங்கள் இருக்கின்ற போதிலும் உயிர் ஆபத்து இல்லை என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான இவ்வாறான சம்பவங்கள் அலட்சியத்தினாலேயே ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டுகின்றனர்.

0 comments:
Post a Comment