எதியோப்பிய பள்ளத்தாக்கில் உதட்டுக்குள் மிகப் பெரிய தட்டொன்றை உட்செலுத்திய வாழ்ந்து வரும் பெண்ணொன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எதியோப்பியாவுக்கு ஆவணப்படமொன்றை எடுக்கச் சென்ற அவுஸ்திரேலிய திரைப்பட தயாரிப்பாளர் ஆபிரஹாம் ஜொபி தலைமையிலான குழுவினர் மேற்படி பெண்ணை முதன் முதலாக கண்டுபிடித்து அது தொடர்பில் அறிவித்துள்ளனர்.
20 வயதான அதயி எலிகிடக்னி என்ற பெண் 59.5 சென்ரிமீற்றர் சுற்றளவும் 19.5 சென்ரிமீற்றர் விட்டமும் கொண்ட இறுகிய களிமண் தட்டை தனது உதட்டுக்குள் உட்செலுத்தியுள்ளார்.
எதியோப்பியாவில் மேற்படி உதட்டுக்குள் களிமண் தட்டை உட்செலுத்தும் பாரம்பரியம் 1896 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து வழக்கத்தில் உள்ளது.
தமது கணவர்மாரை கவர்வதற்கான வழிமுறையாக இந்த வழக்கத்தை எதியோப்பிய பெண்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
உதட்டில் களிமண் தட்டுகளை உட்செலுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ள போதும், பின்தங்கிய பிராந்தியங்களில் அந்த வழக்கம் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
இதற்கு முன் உதட்டுக்குள் உட்செலுத்தப்பட்ட மிகப் பெரிய தட்டின் விட்டம் 15 சென்ரிமீற்றர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment