கழற்றிவிட்ட காதலி: நாய்க்கறி விருந்தளித்து பழிவாங்கிய காதலன்

அமெரிக்காவில் தன்னை நிராகரித்து சென்ற காதலிக்கு, அவளின் செல்ல நாயை கொன்று விருந்து வைத்துள்ளான் காதலன்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியைச் சேர்ந்த காதலர்கள், டேட்டிங் சென்ற போது, காதலன் அவளிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டார்.

அவளை அடித்து, உதைத்து, கடித்துக் குதறி காயப்படுத்தியதால் பீதியடைந்த அந்தப் பெண் ‘உன் சகவாசமே வேண்டாம் என்று அந்த காதலனை நிராகரித்துள்ளார்.

சில மாதங்களுக்குப் பின்னர், அந்தப் பெண்ணை கடந்த வாரம் சந்தித்த முன்னாள் காதலன், நடந்த தவறுக்கு மன்னித்து விடும்படியும், இனி அதுபோல் முரட்டுத்தனமாக நடந்துக் கொள்ள மாட்டேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

அவரது பேச்சை ஓரளவுக்கு நம்பி, மெல்ல அவருடன் பழக ஆரம்பித்த காதலிக்கு தனது வீட்டில் ’பெரிய விருந்து’ ஒன்றை அவர் அளித்துள்ளார்.

விருந்து முடிந்து வீட்டுக்குச் சென்ற சில நிமிடங்களுக்குள் காதலனின் கைப்பேசியில் இருந்து அவளுக்கு ஒரு மெஸேஜ் வந்தது.

கைப்பேசியை எடுத்து மெஸேஜைப் பார்த்த அவள் அதிர்ச்சியடைந்தாள். அவளது ’பொமேரியன்’ இன வளர்ப்பு நாயின் புகைப்படத்துடன் வந்த மெஸேஜில், ‘நீ இப்போது என்னோடு மூக்குப் பிடிக்க சாப்பிட்டு விட்டு வந்தாயே.., அது உனது செல்ல வளர்ப்பு நாயின் கறிதான்.

உணவு எப்படி சுவையாக இருந்ததா?’ என்று கேள்வி எழுப்பிய அந்நபர், ‘உன் வீட்டு வாசல் கதவருகே போய்ப் பார். உன் நாயின் கால்கள் கிடக்கும். எடுத்து சூப் வைத்து சாப்பிட்டு உடம்பையும், மனதையும் தேற்றிக் கொள் என்று குறும்பும் செய்துள்ளார்.

பதறியடித்து, வாசலுக்கு ஓடிவந்து பார்த்தபோது, அங்கே தனது செல்ல வளர்ப்பு நாயின் கால்கள் கிடப்பதைக் கண்டு கொதித்துப் போன அந்தப் பெண், இச்சம்பவம் தொடர்பாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, அவளது முன்னாள் காதலனின் வீட்டுக்கு சென்று பொலிசார் விசாரிக்கையில், அவர் நாயை கொல்லவில்லை என்றும் விருந்து வைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment