ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தான் இருப்பதிலேயே பணக்கார தீவிரவாத அமைப்பு என்பதை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த தீவிரவாத அமைப்பின் ஒருநாள் வருமானம் மட்டும் ரூ. 18 கோடியே 31 லட்சத்து 37 ஆயிரத்து 690 ஆகும்.
ஒரு காலத்தில் இவர்களுக்கு பெர்சிய வளைகுடா நாடுகளில் இருந்து தான் பணம் வந்துள்ளது. அது தான் அவர்களின் முக்கிய பண வரவாக இருந்திருக்கிறது.
ஆனால் தற்போது எண்ணெய் கடத்தல், மனிதர்களை கடத்தி பணம் பறித்தல், திருட்டு ஆகியவை மூலம் இந்த தீவிரவாதிகள் ஒரு நாளில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.
மேலும் ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் மட்டும் 11 எண்ணெய் வயல்கள் உள்ளன.
அது மட்டுமல்லாது பழமை வாய்ந்த விலை மதிப்பற்ற பொருட்களை விற்பதன் மூலமும் ஐஎஸ் அமைப்புக்கு பணம் வருகிறது. உலக வரலாற்றிலேயே ஐ.எஸ் தான் அதிக சொத்துக்கள் வைத்துள்ள பணக்கார தீவிரவாத அமைப்பு என்றும் கூறப்படுகிறது.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்நாட்டு போர் நடந்ததாலும், அங்குள்ள அரசுகள் வலுவாக இல்லாததாலும் தான் ஐ.எஸ் சக்திவாய்ந்த அமைப்பாக உருவெடுத்துள்ளது.
ஈராக்கின் முக்கிய நகரான மொசுலை கைப்பற்றும் முன்பு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் சொத்து மதிப்பு 875 மில்லியன் அமெரிக்க டொலராகும். அதன் பிறகு வங்கிகளை கொள்ளையடித்தும், ராணுவ பொருட்களை கொள்ளையடித்தும் தற்போது அந்த அமைப்பின் மொத்த சொத்து மதிப்பு 2 பில்லியன் டொலராக உள்ளது.

0 comments:
Post a Comment