குழந்தை திருமணம் – ஆர்.எஸ்.எஸ்ஸோடு மோதும் பெரியார்

உலகில் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் மூன்றில் ஒன்று இந்தியாவில் நடப்பதாக யூனிசெப் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ‘ஜப்பானில் கல்யாணராமன்’ நடத்திய கூத்துகளை வெளியிடுவதில் மும்முரமாக இருந்த ஊடகங்கள் இந்த செய்தியை  கண்டு கொள்ளவில்லை.

உலகில் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் கிட்டத்தட்ட பாதி அதாவது 42% தெற்காசியாவில் நடப்பதாகவும், தெற்காசியாவில் குறிப்பாக இந்தியாவில் மட்டும் 33% நடப்பதாகவும், மற்ற தெற்காசிய நாடுகளின் பங்கு 9% ஆகவும் உள்ளது எனத் தெரிவிக்கிறது அந்த அறிக்கை.

இந்தியாவில் திருமணமான பெண்களில் (20 முதல் 49 வய்து வரை) 58 சதவீதத்தினர் தனக்கு குழந்தையாக இருக்கும் போதே திருமணம் செய்து வைத்து விட்டனர் என்று தெரிவித்துள்ளனர். குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கு முறையான மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை என்றும் தெரியவந்துள்ளது.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment