ஐ படக்கதை கசிந்தது! – கொடிய மிருகமாகும் விக்ரம்..!

ஷங்கரின் ‘ஐ’ இசை வெளியீட்டில் மிருக ஒப்பனையில் விக்ரம் மேடையில் தோன்றி ஆடியதைத் தொடர்ந்து இன்று ‘ஐ’ படக்கதை இதுதான் என்று சமூக வலை தளங்களில் ஒரு நம்பகமில்லாத கதை உலா வருகிறது.

இது உண்மையான கதையா அல்லது யாராவது உட்டாலக்கடி செய்த கதையா என்று தெரியவில்லை. அந்தக் கதை கீழே…

விக்ரம் ஒரு சாதாரண விவசாயி. ஹீரோயின் எமி ஜாக்சன் ஒரு பெரிய மாடல் அழகி. எமி மீது விக்ரமிற்கு காதல் ஏற்படுகிறது. இந்நிலையில் எமி, ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் விளம்பர தூதராக மாறுகின்றார். அதன் பின்னர் ஒலிம்பிக் போட்டியின் தூதராக மாறுகின்றார். எனவே விக்ரமால் எமியை நெருங்க முடியவில்லை.

இதனால் தானும் ஒரு மாடலாக வேண்டும் என விக்ரம் முடிவு எடுத்து, தன்னுடைய கிராமத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்கின்றார்.

இந்நிலையின் வில்லன் உபேன் ஒரே நாளில் அழகிய தோற்றம் பெற வேண்டும் என்று ஒரு மருந்தைக் கண்டுபிடுக்கிறார். அதை தன்னுடைய உடம்பிலேயே பரிசோதனையும் செய்து பார்க்கின்றார். ஆனால் மருந்து சரியாக வேலை செய்யாமல் அவரை விசித்திர தோற்றத்திற்கு மாற்றிவிடுகிறது.

இருப்பினினும் மருந்தில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து சரி செய்கிறார். ஆனால் அதை பரிசோதனை செய்து பார்க்க ஆள் இல்லை. அந்த சமயத்தில்தான் விக்ரம், உபேனை சந்திக்கின்றார். விக்ரம் உடம்பில் அந்த மருந்தை செலுத்தியவுடன் அவர் அழகிய வாலிபராக மறுக்கின்றார். ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு செல்கிறார்.

ஆனால். கொஞ்ச நாள் கழித்து மருந்தின் பக்க விளைவுகளால் மிகவும் மோசமான உருவத்திற்கு மாறுகின்றார். எமி ஜாக்சன்தான் தன்மேல் உள்ள பொறாமையால் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டதாக அவரைக் கடத்துகின்றார். பிறகு உண்மையான காரணம் உபேன்தான் என கண்டுபிடிக்கிறார்.

அந்த சமயம் உபேன், விக்ரமை விட கொடிய மிருகமாக மாறிவிடுகிறார். விக்ரமும் ஓநாய் போன்று ஒரு கொடிய விலங்காக மாறிவிட, இருவரும் க்ளைமேக்ஸ் காட்சியில் கொடூரமாக மோதுகின்றனர்.

aiபின்னர் மாற்று மருந்து கண்டுபிடித்து விக்ரம் மாறினாரா இல்லையா என்பது படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தக் கதை சரியானதுதானா என்று தெரிந்து கொள்ளவும் படத்தைப் பார்த்துதான் உறுதி செய்ய முடியும்..!

ஐ திரைப்படப் பாடல்களை இங்கே பார்க்கலாம்!


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment