பாடகியாகவும் நடிகையாகவும் தமிழ் திரையில் பெயரெடுத்த ஆண்ட்ரியா, இயக்குநர் கெளதம்மேனனின் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற படத்தில் சரத்குமாருடன் மிகவும் வசீகரமாகத் தோன்றினாலும் அதன் பின்னர் அவர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மங்காத்தா’ போன்ற படங்களில் அவரது நடிப்பு பேசும் படி இல்லை.
‘விஸ்வருபம்’, ‘விஸ்வருபம்-2′, ‘உத்தமவில்லன்’ என்று உலகநாயனுடன் மட்டுமே படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியாவிற்கு இரண்டு வித ஆசைகள் வந்துள்ளதாம். முதலாவது நடிகர்கள் அஜீத், விஜய், சூர்யா முதலான முன்னணி நாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறாராம். ஒருவேளை அந்த வாய்ப்புகள் தேடிவரவில்லை என்றால், தானே அதிரடி முயற்சிகளில் இறங்கவும் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறாராம்.
இரண்டாவது இசையமைப்பாளராக சாதிக்க வேண்டும் என்பதாம். இயக்குநர் ராம் இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘தரமணி’ படத்தில் ஆண்ட்ரியா ஒரு பாடலை தானே எழுதி, இசையமைத்தும் பாடியுள்ளார்.கூடிய விரைவில் இசையமைப்பாளராகவும் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment