இன்றோடு திரை உலகில் பத்து ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து விட்ட விஷால் பல வெற்றி படங்களை கொடுத்தது மட்டுமல்லாமல் சொந்தமாக விஷால் ஃபில்ம் ஃபக்டரி என்ற பட நிறுவனம் வி மியூசிக் என்ற ஓடியோ நிறுவனம் ஒன்றையும் தொடங்கி வெற்றிகரமாக திரை உலகில் பயணித்து வருகிறார்.
இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் ‘ஜீவா’ படத்தை அவருடன் இணைந்து நடிகர் விஷால், நடிகர் ஆர்யாவுடன் இணைந்து அப்பட்டத்தை வெளியிடுகிறார்கள். விரைவில் திரைக்கு வர விருக்கும் நடிகர் விஷாலின் ‘பூஜை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷால் இயக்குநர் சுந்தர்.சி படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இயக்குநர் சுந்தர்.சி இயக்கும் ‘ஆம்பள’ படத்தில் தனது நடிப்பை தொடர்ந்த நடிகர் விஷால் தற்பொழுது இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில், வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கவிருக்கும் படத்தில் தனது நெருங்கிய நண்பரான ஆர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார். இயக்குநர் பாலா இயக்கத்தில் ‘அவன்-இவன்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்த பின்னர் அவர்கள் இணையப்போகும் இரண்டாவது படம் இது. இப்படத்தில் விஷால்தான் நாயகன் என்றாலும், ஆர்யா ஒரு சிறப்பு தோற்றத்தில் வந்து நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment