சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவிய நடிகை பூஜா காந்தி மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்று கூறியுள்ளார்.
நடிகை பூஜா காந்தி கடந்த சட்டசபை தேர்தலில் பி.எஸ்.ஆர்., காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்விடைந்தார். இந்நிலையில் மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார்.
இது பற்றி பாகல்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, அபினேத்ரி திரைப்படத்தை நானே இயக்கி, நடித்து கொண்டிருந்ததால், அரசியலில் ஈடுபட முடியவில்லை.
ராய்ச்சூர் மாவட்ட பெண்கள், தங்களின் பிரச்னைகளை என்னிடம் கூறியபோது, என்னால் முடிந்தவரை தீர்த்து வைத்தேன். மக்களுடன், நான் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன். விரைவில் மீண்டும் அரசியலில் இறங்குவேன்.
எந்த கட்சி என்பது பற்றி விரைவில் முடிவை அறிவிப்பேன். அரசியலில் எனக்கு சரியான வழிகாட்டி இல்லாததால், சற்று கடினமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment