ரஜினிகாந்த் படத்தை இயக்க விரும்பும் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்

நடிகர் தனுஷ் நடிகை ஷ்ருதிஹாசன் நடித்த ’3′ படத்தின் வெற்றிக்குப் பின்னர் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் படம் ‘வை ராஜா வை’. இப்படத்தில் ‘கடல்’ படத்தின் நாயகன் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் டாப்சி, டேனியல் பாலாஜி, மனோபாலா, விவேக் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இறுதிகட்ட பணிகள் முடிந்து திரைக்கு காத்திருக்கும் இப்படத்தை பிரத்யேகமாக ஐஸ்வர்யா தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு போட்டு காண்பித்துள்ளார்.

இப்படத்தை ரஜினி மிகவும் ரசித்து பார்த்ததாகவும் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் கூறியதாகவும் ஐஸ்வர்யா தனுஷ் கூறியுள்ளார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த ஐஸ்வர்யா, எனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தபோது, சூப்பர்ஸ்டாரை வைத்து இயக்கும் அளவுக்கு எனக்கு போதிய அனுபவம் இல்லை.

எந்த இயக்குனராக இருந்தாலும், அவரது படத்தை இயக்குவது கனவாக இருக்கும். அந்த வகையில், எதிர்காலத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று கூறியுள்ளார்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment