இயற்கைக் கடனைக் கழிக்க இருள்வரும் வரை காத்திருக்க வேணடிய அவல நிலை பெரும்பாலான கிராமங்களில் இன்னமும் இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இயற்கை உபாதையை தணிக்க, அவர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதால், அவர்கள் அனுபவிக்கும் வேதனைகள் எத்தனை? அதனால் அவர்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்புகள் தான் எத்தனை? சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், கழிப்பறையில் மல, ஜலம் கழிக்க வேண்டும் என்பதை இந்த நாட்டின் பிரதமர், செங்கோட்டை கொத்தளத்திலிருந்து கூற வேண்டிய அவல நிலை காணப்படுவதை எண்ணி நான் வேதனைப்படுகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
'இந்திய சுதந்திர தின நாளன்று, என் அன்புடைய தேசமக்களுக்கு, பாரதத்தின் இந்த பிரதான சேவகனின் வாழ்த்துக்கள். நான் உங்கள் மத்தியில் பிரதம மந்திரியாக இல்லை; பிரதான சேவகனாக வந்துள்ளேன்,'' என, உருக்கமாக துவங்கிய பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை; வழக்கமான சலுகை திட்ட அறிவிப்புகள், அரசின் சாதனை விளக்கங்கள், அரசியல் முழக்கங்கள் இல்லாத, பாரத மக்களை நாட்டின், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்காக தனிப்பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் படி ஊக்குவிக்கும் உரையாக அமைந்தது.
இங்கு உரையாற்றிய நரேந்திர மோடி,
சகோதர, சகோதரிகளே, நாம், 21ம் நுாற்றாண்டில் வாழ்ந்து வருகிறோம். இப்போதும், நம் தாய்மார்களும், சகோதரிகளும், வெளியிடங்களில், மல, ஜலம் கழிக்கும் அவல நிலை காணப்படுகிறது. இது எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. பெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டியது நம் கடமையல்லவா!பெரும்பாலான கிராமங்களில், இரவு எப்போது வரும் என, நம் பெண்கள் காத்திருக்கின்றனர். ராத்திரி ஆனதும், மலம் கழிக்க தெருக் கோடிகளுக்கும், சாலையோரங்களுக்கும் செல்கின்றனர்.
இயற்கை உபாதையை தணிக்க, அவர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதால், அவர்கள் அனுபவிக்கும் வேதனைகள் தான் என்னே... அதனால் அவர்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்புகள் தான் எத்தனை? சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், கழிப்பறையில் மல, ஜலம் கழிக்க வேண்டும் என்பதை இந்த நாட்டின் பிரதமர், செங்கோட்டை கொத்தளத்திலிருந்து கூற வேண்டிய அவல நிலை காணப்படுவதை எண்ணி நான் வேதனைப்படுகிறேன். பிரதமர் இவ்வாறு பேசலாமா என, மக்கள் அதிர்ச்சி அடையலாம். என் இந்த உரையை மக்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்களோ தெரியவில்லை; என் வேதனையை உங்களிடம் கூறுகிறேன்.நான் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன்; வறுமையின் பாதிப்புகள் பற்றி எனக்கு தெரியும். ஏழைகளுக்கு மரியாதை வேண்டும்; அது, சுத்தத்திலிருந்து கிடைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
எனவே, வரும் அக்டோபர் 2, காந்தியடிகள் பிறந்த நாளில் இருந்து, 'கிளீன் இந்தியா' பிரசாரத்தை துவக்க உள்ளேன். பள்ளிகளில் இருந்து இதை துவக்க உள்ளேன். நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படும். அதில் கட்டாயம், பெண்களுக்கு என தனியாக கழிப்பறை வசதி செய்யப்படும். இதனால், வகுப்பின் நடுவிலேயே பள்ளிச் சிறுமியர், வீட்டுக்கு செல்ல வேண்டிய அவல நிலை தவிர்க்கப்படும்.இந்த ஆண்டில் துவக்கப்படும் இந்த திட்டத்தால், அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் 15க்குள் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறைகள் கட்டாயம் அமைக்கப்பட்டு விடும். இதற்காக, எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி பயன்படுத்தப்படும். எம்.பி.,க்கள் சார்பில், புதிய திட்டம் ஒன்றை அறிவிக்கிறேன். 'சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா' என்ற அந்த திட்டத்தின் படி, ஒவ்வொரு எம்.பி.,யும் தன் தொகுதியில், ஏதாவது ஒரு கிராமத்தை, முழு அளவில் சுகாதாரம் பெற்ற கிராமமாக, முழு கல்வியறிவு, சமூக நல்லுறவு பெற்ற கிராமமாக மாற்றி காட்ட வேண்டும். என பிரதமர் மோடி மக்களிடம் கோரிக்கை விடுத்தார்

இயற்கை கடனைக் கழிக்க இருள்வரும் வரை பெண்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது! செங்கோட்டையில் மோடி
ReplyDelete