நடுவானில் மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளது வங்கிக் கணக்கில் இருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.எச்- 370 விமானம் கடந்த மார்ச் 8 ஆம் திகதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு செல்லும் வழியில் நடுவானில் மாயமானது.
5 மாதங்கள் ஆகியூம் இதுவரை விமானம் பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இந்த விமானத்தில் சென்ற பயணிகள் அனைவரும் இறந்து விட்டார்கள் என்று மலேசியா அறிவித்தது.
இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகளின் வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம் மூலம் 34,890 அமெரிக்க டொலர்கள் எடுக்கபட்டு உள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக மலேசிய குற்ற பிரிவூ அதிகாரி அஷானி அப்துல் தெரிவித்துள்ளார்.
சி.சி.டிவியில் பதிவான விவரங்களை கொண்டு இதில் சந்தேகபடும் படியான நபர்களின் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருவதாகவூம் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment