கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்றார் கிருத்தி. சிநேகாவின் காதலர்கள் பட ஹீரோயின் கிருத்தி. இவர் கூறியதாவது: சகாக்கள், கொண்டான் கொடுத்தான், அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு போன்ற படங்களில் நடித்திருந்தாலும் சிநேகாவின் காதலர்கள் படத்தில் எனக்கு மாறுபட்ட கதாபாத்திரம் வழங்கினார் இயக்குனர் முத்துராமலிங்கன்.
இப்படத்தில் கவர்ச்சிக்கு நிறைய சந்தர்ப்பங்கள் இருந்தும் ஒரு இடத்திலும் அதுபோல் காட்சி தேவை என்று இயக்குனர் கேட்கவில்லை. நாகரிகமாக எல்லா காட்சிகளும் கையாளப்பட்டன. கொடைக்கானலில் ஆதிவாசிகள் வசிக்கும் பகுதிகளில் ஷூட்டிங் நடந்தது. ஆதிவாசிகள் என்றதும் இலை, தழை கட்டிக்கொண்டு கையில் ஈட்டியுடன் யாரும் அங்கு இல்லை. நாகரிகமான உடையில் இருந்தனர்.
இளைஞர்கள், சிறுவர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் என்று கலக்குகிறார்கள். ஷூட்டிங் முடிந்து புறப்படும்போது நிறைய காய்கறி, பழங்கள் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார்கள்.
நயன்தாராவையும், அவரின் கிளாமர் தோற்றமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் அவரைப்போல் நான் கிளாமராக நடிக்க மாட்டேன். யாருக்கும் போட்டியாக நான் இருக்கமாட்டேன். அவர்களுடன் ஒருவராக கலந்துகொள்வேன். நடனத்தில் நான் மாஸ்டர் டிகிரி முடித்திருக்கிறேன். சூன்யா என்ற அமைப்பு நடத்தி அதன் மூலம் உடல் உறுப்பு தானம்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இவ்வாறு கிருத்தி கூறினார்.

0 comments:
Post a Comment