நான் அழகு இல்லை! ஆனாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்!!

தான் அழகு கிடையாது என்றும் முகதில் இருக்கும் தழும்பு அழகை கெடுக்கிறது என்றும் கூறும் நடிகை லட்சுமி மேனன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

லட்சுமிமேனன் தமிழில் நடிகர் சித்தார்த்துடன் நடித்த ‘ஜிகர்தண்டா’ படமும் மலையாளத்தில் நடிகர் திலீப்புடன் நடித்த ‘அவதாரம்’ படமும் நேற்று வெள்ளிக்கிழமை திரைக்கு வந்ததில் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

பிளஸ்–2 படித்துக் கொண்டிருந்த போது இப்படங்களின் படப்பிடிப்பு நடந்ததாகவும் விடுமுறை நாட்களில் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் லட்சுமிமேனன் கூறுகிறார்.

தற்பொழுது ‘கொம்பன்’- ‘சிப்பாய்’ போன்ற படங்களில் நடித்து வரும் லட்சுமிமேனனுக்கு தமிழில் நடித்த எல்லா படங்களும் வெற்றி பெற்றது ஆனால் தாய் மொழியான மலையாளத்தில் பேசும் படியாக ஒரு படமும் அமையவில்லை.

ஆனால் திலீப்புடன் நடித்த ‘அவதாரம்’ படத்தில் தன் நடிப்பு பேசப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment