'நான் கடவுள்' படத்துக்கு பின்னர் தமிழ்த் திரையுலகில் தலைகாட்டாமல் இருந்த பூஜா நடிக்கும் புதுபடம் ‘கடவுள் பாதி மிருகம் பாதி.
ராஜ்-சுரேஷ்குமார் இயக்குகின்றனர்.படம் பற்றி ராஜ் கூறியது: ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நல்லவன், கெட்டவன் இருக்கிறான். அந்த குணம் எப்போது வெளிப்படும் என்று தெரியாது. இதுதான் படத்தின் கரு. அபிஷேக் ஹீரோ. மிஸ் இந்தியா ஸ்வேதா விஜய் ஹீரோயின். கவுரவ வேடத்தில் பூஜா நடிக்கிறார். மற்றும் சேது, தயாரிப்பாளர் ராஜு முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கிஷோர் மணி ஒளிப்பதிவு. ராகுல்ராஜ் இசை.
நான் கடவுள் படத்துக்கு பிறகு அதிகமாக படங்களை ஒப்புக்கொள்ளாத பூஜா இதில் நடித்தது எப்படி என்கிறார்கள். பூஜா பெங்களூரில் படித்தபோதே அவரை எனக்கு தெரியும். அப்போதிருந்தே இருவரும் நண்பர்கள். படம் எடுப்பதாக அவரிடம் கூறியபோது நம்ப முடியவில்லை என்றார். பணம் வாங்காமல் கவுரவ வேடத்தில் நடித்து தர வேண்டும் என்றேன். ஓ.கே. சொன்னார். நட்புதான் அவரை இப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறது என்றார்.

0 comments:
Post a Comment