நேர்முகப் பரீட்சையில் ரிசர்வ் வங்கியின் கேள்வி! கோச்சடையான் படத்தில் நடித்த நடிகர் பெயர் என்ன?

மத்திய ரிசர்வ் வங்கியின் அலுவலர் தேர்வில் கோச்சடையான் படத்தில் நடித்த நடிகர் பெயர் என்ன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய ரிசர்வ் வங்கியின் உதவி அலுவலர் பணிக்காக நாடு முழுவதும் நடைபெற்ற தேர்வில், கணிதம், புத்தி கூர்மை, ஆங்கிலம், பொது அறிவு என நான்கு பிரிவுகளில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.

அதில் பொது அறிவு பிரிவில், கோச்சடையான் படத்தில் நடித்த நடிகர் பெயர் என்ன எனக் கேட்டு அதற்கு ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஷாருக்கான், இவர்களில் யாரும் இல்லை என பட்டியலில் தெரிவு செய்வதற்காகக் கொடுக்கப்பட்டிருந்துள்ளன.

மேலும், மற்றொரு கேள்வியில் இந்தியில் வெளியான பாபிஷாப் படத்தில் துப்பறியும் பாத்திரத்தில் நடித்த நடிகை பெயர் என்ன எனக் கேட்டு வித்யாபாலன், கரினா கபூர், பிரியங்காசோப்ரா, இவர்களில் யாரும் இல்லை எனப் பதில்கள் பட்டியலில் கொடுக்கப்பட்டிருந்துள்ளன.

இதேபோல், இரண்டு மாதங்களுக்கு முன்பு மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) சார்பில் நடத்தப்பட்ட அலுவலர் தேர்வில் இந்தியில் யார் உயரமான நடிகை, ஒரு இந்திப் படத்தை சொல்லி யார் இதில் நடிகராக நடித்தது போன்ற கேள்விகள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், நாட்டின் மிக மதிப்பு வாய்ந்த மத்திய ரிசர்வ் வங்கியின் அலுவலர் பணிக்குப் இவ்வாறு சினிமாவில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதற்கு கல்வியாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment