கடந்த ஆண்டு இறுதியில் நடிகர் மாதவன் தமிழ் திரைப்படமொன்றில் குத்துச் சண்டை வீரராக நடிக்கிறார் என்றும் அதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்டதென்றும்; அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தில் மாதவன் நீண்ட தலைமுடியுடனும் தாடியுடனும் வலிமையான உடல்வாகுடனும் தோன்றுவதற்காக உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார். மாதவன் நடிக்கும் ‘ இறுதிச் சுற்று’ என்ற புதிய படத்தின் பணிகள் ஆரம்பித்து விட்டதால் நடிகர் மாதவன் மகிழ்ச்சியில் உள்ளார்.
தமிழ் மற்றும் ஹிந்தியில் தயாராகும் இந்த படத்தை ‘வாயை மூடி பேசவும்’ மற்றும் ‘காவியத்தலைவன்’ போன்ற படங்களை வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த சசிகாந்தின் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிக்கிறது.
இந்த படத்தை நடிகர்கள் ஸ்ரீகாந்த் விஷ்ணு நடித்த ‘துரோகி’ படத்தை இயக்கிய மணிரத்தினம் உதவியாளர் சுதா கொங்காரா இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
சிவா ஒளிப்பதிவு செய்கிறார். மாதவனுடன் ரித்திகா நாசர் தவிர ஹிந்தித்திரையுலகில் பிரபலமான நடிகர் நடிகைகளும் நடிக்கிறார்கள்.நடிகர்கள் தேர்வும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடந்து வருகிறது.

0 comments:
Post a Comment