இயக்குநர் செல்வராகவனை விட அவரது படைப்புகள் அதிகம் பேசப்படும் அந்த வகையில் அவரிடம் உதவியாளராக இருந்த சச்சின் ” கபடம் ” என்ற படத்தில் நாயகனாக அறிமுகம் ஆகின்றார். சச்சின் இயக்குநர்கள் ராதாமோகன்- சிம்புதேவன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார்.
அஜீத் அறிமுகமான “அமராவதி” மற்றும் தலைவாசல் உட்பட பல வெற்றி படங்களை தயாரித்த சோழாபொன்னுரங்கத்தின் சோழா கிரியேஷன்ஸ் மற்றும் மௌண்டன் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த ‘கபடம்’ என்ற படத்தை கதை- திரைக்கதை எழுதி ஜோதிமுருகன் இயக்குகிறார்.
இந்த படத்தில் சச்சின் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அங்கனாராய் நடிக்கிறார். மற்றும் ஆதித்யா- காதல்சரவணன்- அணிகா- அஸ்வின்- ஹேமா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கே.திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய- நா.முத்துகுமார் பாடல் வரிகளுக்கு சாஷி இசையமைக்கிறார்.
எதிர்மறையான எண்ணம் கொண்ட ஜோடிகள் நிச்சயம் செய்துகொள்கிறார்கள். நிச்சயதார்த்ததிற்கு பின்னர் இருவரும் பழகுகிறார்கள் .பழக்கத்தின் போது நாயகியின் நடவடிக்கைகள் அவனுக்கு ஒத்துப் போகவில்லை நாயகியை திருத்தி விடலாம் என்று நாயகன் முயற்சி செய்கிறான் இதுதான் கதைச் சுருக்கம் என்று கூறும் நாயகன் சச்சின் நல்ல தரமான படங்களைத் தயாரிக்கும் பட நிறுவனம் என்று பேர் வாங்கிய சோழா கிரியேசன்ஸ் மூலம் அறிமுகம் ஆவது குறித்து பெருமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment