இங்கிலாந்தில் நான்கு வயது குழந்தை சாப்பிட்ட பிரபல நிறுவனத்தின் ஐஸ்கிரீமில் இருப்புத் துண்டுகள் (மெட்டல் ஸ்பிரிங்) இருந்ததால் அந்த குழந்தை அதிர்ச்சி அடைந்துள்ளது.
மேலும் குழந்தையின் நாக்கு சற்று சேதமடைந்துள்ளதால் உணவு சாப்பிட மிகவும் கஷ்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இங்கிலாந்தின் கோவென்ட்ரி பகுதியைச் சேர்ந்த ஆலன் செரிஷ் என்ற நபர் தனது இரண்டு குழந்தைகளையும் கடைக்கு அழைத்து சென்று கேட்பரீஸ் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துள்ளார்.
அந்த ஐஸ்கிரீம் உண்பதற்காக வாங்கிய நான்கு வயதுடைய அறோரா மற்றும் இரண்டு வயதுடைய டோபியாஸ் இருவரும் மகிழ்சியுடன் உண்டு கொண்டு தந்தையுடன் நடந்து வந்தனர்.
திடீரென அறோரா வாயைப் பொத்திக் கொண்டு கத்த ஆரம்பித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை ஆலன் செரிஷ் மகளின் வாய்ப் பகுதிக்குள் விரலை விட்டு பார்த்த போது ஸ்பிரிங் இருந்ததைக் கண்டுள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து ஆலன் செரிஷ் இதுகுறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்துள்ளார்.
மிகவும் அரிதாக இதுபோன்ற தவறுகள் நடந்து விடுகின்றன. எங்கள் நிறுவன தயாரிப்புகள் அனைத்தும் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டுத்தான் விற்பனைக்கு அனுப்பபடுகின்றன.
இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கவும் நடந்த தவறுக்கு தேவையான நஷ்டஈடுத் தொகையை கொடுப்பதாகவும் கேட்பரீஸ் பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான ஆர் அன்ட் ஆர் ஐஸ்கிரீம் தெரிவித்துள்ளது.



ஐஸ்கிரீமில் இருப்புத் துண்டுகள்! நான்கு வயது சிறுமியிடம் சிக்கியது!
ReplyDelete