அஞ்சான் வசூல் தெரியுமா?

இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா சமந்தா இணைந்து நடித்துள்ள அஞ்சான் திரைப்படம் நேற்றையதினம் உலகம் முழுவதும் 1400 திரை அரங்குகளில் இந்தப் படம் வெளியானது. தமிழகத்தில் 450க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது.

அஞ்சான் படம் வெளியான முதல் நாளே ரூ 11.5 கோடி வசூலை அள்ளியுள்ளது. லிங்குசாமி இயக்கத்தில் இந்தப் படத்தில் சூர்யா மும்பை தாதாவாக வருகிறார். அவரது நண்பராக வித்யுத் ஜம்வால் நடித்துள்ளார்.

படம் குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், இதுவரை சூர்யாவின் எந்தப் படத்துக்கும் கிடைக்காத ஆரம்ப வசூல் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது. முதல் நாளில் தமிழகம், அவுஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ரசிகர்கள் படம் பார்க்க அலைமோதினர். படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே ரூ 11.5 கோடி இந்தப் படத்துக்கு ஆரம்ப வசூலாகக் கிடைத்துள்ளது. 

சூர்யாவின் படங்களின் வசூலில் இது புதிய சாதனையாகும். அவுஸ்திரேலியாவில் நேற்று ஒரே நாளில் ரூ 22.82 லட்சத்தைக் குவித்துள்ளது இந்தப் படம். பிரிட்டனில் ரூ 41.59 லட்சத்துக்கும் அதிகமாக வசூலைக் குவித்துள்ளது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment