பச்சை குத்துவதில் ஆர்வமாக உள்ள டாப்சி!

பிரபல தமிழ் திரைப்பட நடிகை டாப்சி தற்போது தன் பெயரை தன் உடலில் பச்சை குத்தி உள்ளார். அவர் பச்சை குத்திய இடமும் பச்சை குத்திய விதமும் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

இளம் நடிகை டாப்சி ஆடுகளம்- வானம்- ஆரம்பம் போன்ற படங்களில் நடித்திருந்தார். தமிழ் மொழி படங்கள் மட்டுமல்லாது பல தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகின்றார்.

டட்டூ என்று சொல்லப்படும் இந்த பச்சை குத்தும் கலாச்சாரத்தை நடிகை த்ரிஷா அதிகமாகப் பிரபலப்படுத்தியிருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் நடிகை திரிஷா ஐந்து இடங்களில் புதிதாக பச்சை குத்திக் கொண்டார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது டாப்சியும் பச்சை குத்தும் விவகாரத்தில் சிக்கியுள்ளார்.

தன்னுடைய கணுக்காலில் முன்பே பச்சை குத்தியிருந்த டாப்சி தற்போது தனது இடுப்பின் பின் பகுதியில் பச்சை குத்தியுள்ளார். இடுப்புக்கும் தொடைக்கும் இடையே இப்படி இவர் பச்சை குத்தியிருக்கும் விடயம் அறிந்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இது தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக டாப்சி கூறியுள்ளார்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment