அமெரிக்காவின் தென்கிழக்கு நியூமெக்ஸிக்கோவில் ஒரு குகையில் கிட்டத்தட்ட 609 மீட்டர் (2000 அடி) ஆழத்தில் கீழே புதைந்திருந்த உப்பு படிகங்கலில் இருந்ததை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந் நுண்ணுயிரிகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால உயிரினமாக கருதப்பட்ட டைனோசர்கள் போன்றவற்றை பத்து மடங்கு பழமை வாய்ந்ததாக கருதப்படுவது உயிரின ஆராய்ச்சியாளர்களிடையே மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன் மிகவும் பழமைவாய்ந்த பக்டீரியாவாக கருதப்பட்டது சுமார் 25- 40 மில்லியன் வருடங்கள் பழமைவாய்ந்த தேன் மெழுகில் பாதுகாக்கப்பட்ட ஒரு தேனீ யில் இருந்த பாக்டீரியாவாகும்.
பக்டீரியாக்கள் எப்படிப்பட்ட கடின சூழ்நிலைகளையும் தாங்கக் கூடிய ஸ்போர்ஸ் எனும் கட்டமைப்பை பெற்றிருக்கின்றன. எனவே அவை சலனமின்றி நீண்ட காலம் வாழும் தன்மை பெற்றிருக்கின்றன.

0 comments:
Post a Comment