
ஐ.நா. விசாரணைகள் குறித்து மோடியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துமா?
இந்திய மத்திய அரசாங்க ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதல்தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தியா சென்றுள்ளனர்.
இந்த பயணத்தின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வூ தொடர்பில் விளக்கமளிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
பாரதீய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த விஜயம் முக்கியமாக நோக்கப்படுகிறது.
இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்றே கூட்டமைப்பு டெல்லி செல்கின்றது.
கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலைநாதன், பொன். செல்வராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. விசாரணைகள் குறித்து இந்தியாவிடம் வலியுறுத்துமா என இன்று காலை இந்தியா செல்வதற்கு முன்னர் இந்த பயணம் குறித்து செல்வம் அடைக்கலநாதனிடம் தொடர்புகொண்டு கேட்டகப்பட்டது. (வீடியோ)
0 comments:
Post a Comment