அசாம் மாநிலத்தில் இளம்பெண்ணை தூக்கிலிட்ட காணொளியை போடலாந்து தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தின் சிராங் மாவட்டத்தில் நேற்று பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஐந்து போடலாந்து தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தங்களது கும்பலை சேர்ந்த கும்பலில் 5 பேர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக, சிராங் மாவட்டத்தில் தகவல் கொடுப்பவராக செயல்பட்ட இளம் பெண் ஒருவரை போடலாந்து தீவிரவாதிகள் தூக்கிலிட்டதுடன், அந்த காணொளியையும் வெளியிட்டுள்ளனர்.
இந்த காணொளியில் தீவிரவாதிகள் கூறியதாவது, நேற்று பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதால் நாங்கள் இந்த கொலையை அரங்கேற்றினோம் என்றும் எங்கள் வீரர்களை கொன்றால் இதேபோல் மற்றவர்களை கொல்வோம் எனவும் எச்சரித்துள்ளனர்.

0 comments:
Post a Comment