இது என்னடா புதுக் குழப்பம்? தமன்னா பட இசையை லட்சுமி மேனன் டீம் திருட்டாம்!

தமன்னா படத்துக்கு தமன் அமைத்த இசையை லட்சுமிமேனன் பட டீம் காப்பி அடித்ததாக புகார் எழுந்துள்ளது.  தமிழில் பாய்ஸ் படத்தில் நடித்தவர் தமன். பின்னர் இசை  அமைப்பாளராகி, முன்னணி இசை அமைப்பாளர்களில்  ஒருவராக இருக்கிறார். ஈரம், தில்லாலங்கடி, முன்தினம்  பார்த்தேனே, காஞ்சனா உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசை  அமைத்ததுடன் தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்து  வருகிறார். 

இவர் இசை அமைத்து திரைக்கு வரும படம் ஆகடு.  மகேஷ்பாபு, தமன்னா நடித்துள்ளனர். இப்படத்துக்காக இசை  டிராக் இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால்  இந்த இசையை லட்சுமிமேனன் நடிக்கும் அவதாரம் என்ற  மலையாள பட டிரைலருக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது அறிந்து  தமன், தமன்னா மற்றும் பட குழு ஷாக் ஆனது.

இதுபற்றி அவதாரம்  பட இசை அமைப்பாளர் தீபக் தேவ்  கூறும்போது,‘அவதாரம் படத்திற்கு இசை டிராக் இன்னும்  அமைக்கவில்லை. இதற்கிடையில் இப்படத்தின் டிரைலருக்கு  இசை சேர்ப்பதற்காக இணைய தளத்தில் எனது பட எடிட்டர்  தேடியபோது கிடைத்த இசையை பயன்படுத்தி விட்டார். அது  ஆகடு படத்தின் இசை டிராக் என்பது பிறகுதான் தெரியவந்தது.  அதை நீக்கிவிடுவேன் என்றார். ஆனால் இது பிரச்னைக்கு தீர்வு  இல்லை என தமன் டீம் கூறி வருகிறது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment