சீனாவில் உள்ள ஒரு இளைஞர், நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென நாய் கடித்ததால் துண்டான ஆணுறுப்பை சீன மருத்துவர் குழு ஒன்று ஆறு மணிநேர போராட்டத்துடன் சத்திரசிகிச்சை செய்து மீண்டும் ஒட்டவைத்துள்ளனர்.
சீனாவில் உள்ள Guangdong Province என்ற பகுதியை செர்ந்த Yang என்பவர் சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு, தனது நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அவருடைய நண்பர் தான் வளர்க்கும் நாயையும் அழைத்துவந்திருந்தார். நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென Yangஇன் ஆணுறுப்பை நாய் கவ்வி பிடித்து கடித்து துண்டாக்கிவிட்டது.
இதனால் Yang வலியால் துடித்தார். பதறிப்போன நண்பர் இங்கிருந்து ஓட்டம்பிடிக்க, அருகில் இருந்தவர்களின் உதவியுடன் துண்டான ஆணுறுப்பையும் எடுத்துக்கொண்டு யங் என்பவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் சுயநினைவு இல்லாமல் இருந்த அவருக்கு சீனாவின் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் தலைமையிலான குழு அறுவை சிகிச்சை செய்தது.
சுமார் ஆறுமணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் துண்டான ஆணுறுப்பு மீண்டும் ஒட்டவைக்கப்பட்டது.
இன்னும் சில நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை செய்துவருகின்றனர். காரணம் Yang உடன் பேசிக்கொண்டிருந்த அவருடைய நண்பர் தன் நாயுடன் தலைமறைவாகி உள்ளார்.

0 comments:
Post a Comment