காதலி காணவில்லை - கதாநாயகனாக கிஷோர்!

"பொல்லாதவன்' படத்தில் வில்லனாக நடித்த கிஷோரை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. வில்லனாக பல படங்களில் நடித்தாலும், "வெண்ணிலா கபடிக்குழு', "ஹரிதாஸ்' என சில படங்களில் தன்னுடைய குணச்சித்திர நடிப்பால் கலங்க வைத்தவர். 

போலீஸ் வேடம் இவருக்கு எளிதாக பொருந்திப் போகும். "ராக்ஸசா' படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான கர்நாடக அரசின் விருதைப் பெற்ற இவருக்கு, கதாநாயகனாக நடிக்க ஆசை வந்திருக்கிறது. 

"காதலி காணவில்லை' படத்தின் நாயகன் இவர்தான். ஜோடியாக ஹர்த்திகா ஷெட்டி நடிக்கிறார். 

இவர் ஏற்கெனவே "ஆள்' படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இரட்டையர்களான ரவிராஜா இந்தப் படத்தை இயக்குகின்றனர்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment