டெல்லியில் இளம் பெண் ஒருவர் இரவில் சாலையில் சென்றபோது, லிஃப்ட் கொடுப்பதாக கூறி காரில் ஏற்றிய மூவர் காரிலேயே அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.
வடமேற்கு டெல்லியில் பாலஸ்வா டெய்ரி பகுதியில் வசிக்கும் 17 வயது இளம்பெண் இரவில் சாலையில் நடந்து சென்றபோது, ஒரு கார் வந்து அவர் அருகே நின்றுள்ளது.
அதில் அந்த பெண்ணுக்கு தெரிந்த நிலபுரோக்கர் சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் சஞ்சய், ஜீத்து ஆகியோர் இருந்துள்ளனர்.
சதீஷ் தனக்கு அறிமுகமானவர் என்பதால் காரில் ஏறிய இளம் பெண்ணை, சிறிது தூரம் சென்றதும் சதீஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர், கீதா காலணி அருகே அந்தப் பெண்ணை காரில் இருந்து வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, அந்த பெண் பொலிசில் அளித்த புகாரையடுத்து சதீஷ், சஞ்சய், ஜீத்து ஆகிய 3 பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

0 comments:
Post a Comment