மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிகை மீனா நடிப்பில் வெளிவந்த படம் திர்ஷ்யம் தமிழ் மீளுருவாக்கத்தில் நடிகர் கமலுடன் நடிகை ஸ்ரீதேவி நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் திர்ஷ்யம் தமிழ் மீளுருவாக்கத்தில் ஸ்ரீதேவி நடிக்கவில்லை என்று இயக்குநர் ஜீது ஜோசப் கூறியுள்ளார்.
தமிழில் திர்ஷ்யம் மீளுருவாக்கம் செய்யக் கூடாது என்று கேரளாவில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தென்காசி பின்னணியில் திர்ஷ்யம் கதை நிகழ்வது போல தமிழில் தயாராக உள்ளது. இப்படத்தில் ஸ்ரீதேவி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இப்படத்தில் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை என்றும் ஸ்ரீதேவி இப்படத்தில் நடிக்கவில்லை. தற்போதைக்கு கமல் மற்றும் ‘த்ரிஷ்யம்’ படத்தில் நடித்த ஆஷா சரத் ஆகியோர் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் இப்படத்தை இயக்கவிருக்கும் ஜீது ஜோசப் கூறியுள்ளார்.

கமல் படத்தில் நடிகை ஸ்ரீதேவி நடிக்கிறார் என்ற செய்தியில் உண்மையில்லை!
ReplyDelete