சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 380இற்கும் மேற்பட்ட உயிர் பலி!

சீனாவின் யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 381 பேர் உயிரிழந்தனர். 2,000 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று சீன அரசு தெரிவித்துள்ளது.

மியான்மர் எல்லையொட்டிய யுனான் மாகாணத்தில் உள்ள ஷடோங் பகுதியில் நேற்று (03) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.5 ஆக பதிவான நிலநடுக்கத்தின் காரணமாக, வீடுகளை விட்டு மக்கள் வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

தொலை தொடர்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில், மீட்புப்பணைகளை ராணுவத்தின் மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவின், இந்திய மற்றும் நேபாள எல்லையையொட்டிய அருணாசல பிரதேச மாநிலம் அருகே உள்ள, ஷிகேட்ஸ் பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் 5.0 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.

12,000 வீடுகள் சேதமடைந்துள்ளன, இந்த வடகிழக்கு பகுதியிலுள்ள 277 மைல் சுற்றளவு கொண்ட யுனான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங்கில் 429,000 மக்கள் வசித்து வருகின்றனர்.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 380இற்கும் மேற்பட்ட உயிர் பலி!
    China earthquake: Death toll at over 380, rescuers dig for survivors

    ReplyDelete