அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து சூர்யாவின் ஓப்பன் டாக்..!

அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் இன்னும் பலரின் வயிற்றெரிச்சலில் தான் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மைதான். 

இது குறித்து பிரபலங்கள் யாரும் வாய் திறக்க நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து சூர்யா பேசியுள்ளார். அஞ்சான் படத்தின் புரமோஷனுக்காக கடந்த ஒரு மாதமாக பல இடங்களுக்கு சென்று கொண்டிருக்கும் சூர்யாவை கேரளாவில் ஒரு நிருபர் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகும் ஆசை இருக்கிறதா என்று கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த சூர்யா, அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் மீது எனக்கு எப்போதுமே ஆசை வந்ததில்லை, இனி வரவும் வராது எனக்கு எப்பவுமே ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினி சார் தான். அவரிடத்தில் இன்னொருவரை நினைத்து கூட என்னால் பார்க்க முடியாது என்று விஜய்யை லேசாக சீண்டியிருக்கிறார். ம்ம்ம்…. இந்த பிரச்சனை இப்போதைக்கு முடிவுக்கு வராது போலிருக்கே…

அஞ்சான் திரைப்படம் நாளை உலகமெங்கும் ரிலீசாகவிருக்கிறது படம் வெற்றிபெற திருப்பதி பிரதர்ஸ், யுடிவி, சூர்யா, சமந்தா என அனைவருக்கும் வாழ்த்துகள்.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment