மயக்கமடைந்த கணவரை உயிருடன் புதைக்க முயன்ற மனைவி!

கிருஷ்ணகிரி அருகே கட்டையால் அடித்ததில் மயங்கிய கணவனை புதைக்க முயன்ற மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சின்னபாலே தோட்டத்தை சேர்ந்த விவசாயியான அர்ஜுனனின் மனைவி மலர், அப்பகுதி மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக உள்ளார்.

அவர் சுய உதவிக்குழுவில் கணவனுக்கு தெரியாமல் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் சுய உதவிக் குழுவின் உறுப்பினர்கள் மலரின் வீட்டிற்கு சென்று, கடனை கட்டுமாறு கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அர்ஜுனன், கடனை வாங்கி என்ன செய்தாய் என்று மனைவியிடம் கேட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த மலர், கட்டையால் கணவரின் தலையில் பலமாக தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அர்ஜுனன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து, கணவர் இறந்துவிட்டதாக நினைத்த மலர், சாக்கு பையை எடுத்து கணவர் உடலை மூட்டை கட்டி புதைக்க திட்டமிட்டுள்ளார்.

அந்த சமயத்தில், அர்ஜூனனின் கைப்பேசிக்கு வந்த அழைப்பை, மலர் எடுத்து பேசியபோது, மலர் மாறி மாறி பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த நண்பர் வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டில் அர்ஜுனன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அயலவர்களின் உதவியுடன் அர்ஜுனனை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

பின்னர், பொலிசார் மலரிடம் நடத்திய விசாரணையில் கணவரை தாக்கியதை ஒப்புக்கொண்டதால், அவரை கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment