‘நீ படிப்பை பாதியில் நிறுத்துவாய்’ என்று சோதிடன் கூறியதைப் பொய்யாக்க வேண்டும் என்பதற்காக உழைத்து படித்தாலும்- குடும்ப சூழல் காரணமாக பாதியில் படிப்பை நிறுத்திய பொழுதும்- ராசையா துவண்டு விடவில்லை ராஜாவாய் எழுந்தார் இளையராஜாவாய் உயர்ந்தார்.
ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் புத்தகத் திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தொடங்கியது.
இதில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு உலக தமிழர் புத்தக அரங்கினை திறந்து வைத்தார். மேலும் தோன்றும்போது புகழோடு தோன்ற வேண்டுமென்றால் நான் இங்கு வந்திருக்கவே முடியாது. அறியாமையும் கூட ஒரு வகையில் அறிவு தான் என்று கூறினார்.
பிரசவ வலி எப்படி இருக்கும் என்பது தாய்மார்களுக்கு தான் தெரியும் பாடல்கள் எழுதுவது மிகவும் எளிதானது. சினிமாவுக்கு பாடல் எழுதும் கவிஞர்கள் பாட்டு எழுதி முடிப்பதற்குள் பிரசவ வலியே வந்துவிட்டது போல கூறுகிறார்கள்.
எளிமையான பணியை பிரசவ வலியுடன் ஒப்பிடுவது தவறு என்று கூறினார். இசையை கேட்கும் போது கிடைக்கும் அமைதி- மகிழ்ச்சி புத்தகம் படிக்கும்போதும் கிடைக்கும் என்கிறார். வெற்றி என்று எதையும் எடுத்து கொள்ளாதீர்கள். அவ்வாறு எடுத்து கொண்டால் குறுகிய வட்டத்திற்குள் சென்று விடுவீர்கள் என்று இந்த இசை மேதை இளையராஜா மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

அறியாமையும் ஒரு வகையில் அறிவுதான்! இசைஞானி
ReplyDelete