விஷால், ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம், பூஜை. ஹரி இயக்கும் இந்தப் படத்தை விஷால் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு கோவையிலும் காரைக்குடியிலும் நடந்து வந்தது. நேற்றுவரை பீகாரில் நடந்தது.
நேற்றோடு அங்கு படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து படக்குழு சென்னைக்கு இன்று திரும்புகிறது. இதையடுத்து இரண்டு பாடல் காட்சிகளை படமாக்க, படக்குழுவினர் சுவிட்சர்லாந்து செல்கின்றனர். இந்தப் படத்தின் வினியோக உரிமையை வேந்தர் மூவிஸ் வாங்கியுள்ளது.

0 comments:
Post a Comment