முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக காங்கிரஸ் கட்சியால் நியமிக்கப்பட்ட தெண்டுல்கரை விமர்சித்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் சுக்லா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜிவ் சுக்லா கூறுகையில், நீங்கள் பாரளுமன்றத்திற்கு வருகை புரிவது இல்லையென்றால் நீங்கள் ஏன் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்?
பாராளுமன்றத்திற்கு வருகை புரிய வேண்டும் என நான் கடந்த வாரம் தெண்டுல்கரிடம் பேசியபோது, அவர் உறுதி அளித்ததோடு, அடுத்த தொடரிலும் கலந்து கொள்வேன் என்று என்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சச்சின் தெண்டுல்கர் இந்த பருவகாலத்தில் பாராளுமன்றத்துக்கு 5 வரவையே பதிவுசெய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment