ஆந்திராவில் 3 வயது சிறுமி விழுங்கிய ஊசியை அறுவை சிகிச்சை செய்யாமலே மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
ஆந்திராவில் கர்னூல் மாவட்டம் லட்சுமி நகரை சேர்ந்த பவித்ரா என்ற 3 வயது சிறுமி வீட்டு மேஜையில் இருந்த தையல் எந்திரத்தின் ஊசியை விழுங்கியதால் வலி தாங்காமல் அலறியுள்ளது.
இதையடுத்து குழந்தையின் பெற்றோர் கர்னூல் பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது சிறுகுடல் பகுதியில் ஊசி இருப்பது தெரியவந்துள்ளது.
பின்னர், சிறுமிக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டோஸ்கோப்பி முறையில் ஊசியை எடுக்க முடிவு செய்யப்பட்டதையடுத்து, மருத்துவர்கள் 3 மணி நேரம் போராடி எண்டோஸ்கோப்பி முறையில் ஊசியை வெளியே எடுத்துள்ளனர்.

0 comments:
Post a Comment