தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90 களில் காதல் நாயகனாக வலம் வந்த நவரச நாயகன் கார்த்திக் தனது இயல்பான, குறும்பான நடிப்பால் பல பெண்களின் மனங்களை கொள்ளை கொண்டவர்.
ரஜினி, கமலுக்கு அடுத்த நிலையில் முன்னணி நடிகராக திகழ்ந்ததுடன் எத்தகைய வேடங்களிலும் கார்த்திக் சிறப்பாக நடிக்கக்கூடியவர். பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகனான கார்த்திக் திரையுலகை விட்டு அரசியலில் ஒதுங்கி பின்னர் நீண்ட இடைவேளைக்கு ‘ராவணன்’ படத்தில் நடித்தார். தற்போது ‘அனேகன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் முத்துராமனுக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் நிறைய வீடுகள் மற்றும் வணிக வளாகம் உள்ளன. இவற்றின் மதிப்பு பல கோடிகள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. நடிகர் முத்துராமனின் பூர்வீக வீட்டில் கார்த்திக் குடும்பத்துடன் வசித்தார். இதே வீட்டில் முத்துராமன் மனைவி சுலோசனா மற்றும் குடும்பத்தினர் வசித்தார்கள். நடிகர் முத்துராமனுக்கு கார்த்திக் தவிர இன்னொரு மகன் மற்றும் மகள்கள் உண்டு.
இந்நிலையில் நேற்று அவரது சொந்த வீட்டில் இருந்து அவரை வெளியேறும்படி அவரது உறவினர்கள் கூற, விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. கார்த்திக்கை ஏமாற்றி அவரது உறவினர்கள் பல கோடி ரூபாயை அபகரித்து விட்டதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது.
பத்திரத்திலும் கார்த்திக்கின் பெயர் இல்லை. இதே வீட்டில் தான் கார்த்திக் பல வருடங்களாக இருந்ததாக கூறப்படுகிறது. சொத்தில் தனக்கும் பங்கு உண்டு என்றும், ஏமாற்றப்பட்டு விட்டேன் என்றும் நெருக்கமானவர்களிடம் கவலையுடன் கூறிய நடிகர் கார்த்திக் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறார்.

0 comments:
Post a Comment