மும்பையை சேர்ந்த ஐஸ்வர்யா கங்கே என்ற மாணவிக்கு பிரதமர் நரேந்திமோடிக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
முக்கிய பிரச்சனைகளை குறிப்பிட்டு பிரதமருக்கு கடிதமெழுதியுள்ளார்.
தற்போது அந்த கடிதத்திற்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் அந்த பெண்ணிற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுபற்றி அந்த பெண் கூறுகையில், நான் எந்த பதிலும் எதிர்பார்த்து அவருக்கு கடிதம் எழுதிவில்லை, என்னுடைய வாழ்க்கையில் நாளுக்கு நாள் நடக்கும் பிரச்சனைகளைப் பார்த்து, அவற்றிள் முக்கியமானதை அவரது கவனத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று நினைத்தேன்.
பிரதமரிடமிருந்து என்னுடைய முகவரியில் வீட்டுக்கு கடிதம் வந்த போது என்னால் நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், என்னுடைய பரிந்துரைகள் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்காது என்பது எனக்கு தெரியும், ஆனால் எனது கடிதங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment