தோனி, கோஹ்லிக்கு பத்ம விருதுகள்?

இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் தோனி மற்றும் விராட் கோஹ்லி ஆகியோரது பெயர்கள் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைத் தெரிவுசெய்து அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டு தோனிக்கு பத்ம பூஷன் விருதும், கோஹ்லிக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்குவதற்கு விளையாட்டு அமைச்சகத்திற்கு பி.சி.சி.ஐ. பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணித்தலைவர் தோனி 2009ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வெற்றி பெற முடியாமல் திணறி வரும்போதும், அவரது தலைமையில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றதையடுத்து அவருக்கு இந்த முறை பத்ம விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதேபோல் 2008ல் அறிமுகமான விராட் கோஹ்லி, கிரிக்கெட்டில் தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறார். அவர் இதுவரை 134 ஒருநாள் போட்டிகளில் 19 சதம்உள்பட 5634 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. Aachi News: தோனி, கோஹ்லிக்கு பத்ம விருதுகள்?

    ReplyDelete