கங்கை அமரனை ஜெயலலிதா மிரட்டினாரா?

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில், கங்கை அமரனை மிரட்டி பங்களா வாங்கவில்லை என வழக்கறிஞர் வாதாடியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா முன் நேற்று விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது வாதாடிய வழக்கறிஞர் மணிசங்கர், பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் கொடுத்துள்ள சாட்சியத்தில் ஜெ.ஜெ. டிவி இயக்குனராக இருந்த பாஸ்கரன் தன்னை நேரில் சந்தித்து ஜெ.ஜெ. டிவிக்கு நிகழ்ச்சி தயாரித்து கொடுக்கும்படி கூறியதாகவும், நான் மறுத்ததால் மிரட்டியதாகவும் கூறியிருந்தார்.

ஆனால், அதே கங்கை அமரன் கூறியுள்ள சாட்சியத்தில் சசிகலாவுக்காக விற்பனை செய்த பையனூர் பங்களாவை மிரட்டி வாங்கியதாக கூறவில்லை.

இந்நிலையில், கங்கை அமரனை எனது கட்சிக்காரர் மிரட்டி நிலம் வாங்கினார் என்று பொலிசார் கூறுவதில் எப்படி உண்மை இருக்கும் என்று வாதாடியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சில அரசு தரப்பு சாட்சிகள் முதலில் கொடுத்த சாட்சியை குறுக்கு விசாரணையின் போது மறுத்துள்ளனர்.

சசிகலாவுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கும், ஜெயலலிதாவுக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்றும், அவரை பழிவாங்கும் நோக்கத்தில் பொலிசார் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. கங்கை அமரனை ஜெயலலிதா மிரட்டினாரா?

    ReplyDelete