இன்றைய இளம் தலைமுறையினர் உடலில் டட்டூ வரைந்து கொள்வது நாகரீகமாகியுள்ளது.
அத்துடன், தலைக்கு வர்ணம் பூசுவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.
வர்ணசாயங்கள் பயன்படுத்துவதாலோ டட்டூ வரைவதாலோ லுக்கீமியா புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.
உடலை பாதிக்கும் இரசாயணம் நமது உடலில் உள்ள மரபணுவை நேரடியாக சென்று தாக்கக் கூடிய கார்சினோஜினிக் என்னும் இரசாயனம் வர்ணசாயங்களில் கலக்கப்படுவதால் அவை தலைக்கு உபயோகப்படுத்தப்படும்போது தலைமுடிகளில் வேர் பகுதிகளின் மூலம் உடலில் ஊடுருவி இரத்தத்தில் கலந்து விடுகின்றன.
இதன் நச்சுப்பொருட்கள் சிறுநீரகப்பையில் நிரந்தரமாக தங்கிவிடுவதால் இவை லிம்போமா என்னும் புற்றுநோய் ஏற்படக்காரணமாகிறது என்கின்றனர் புற்றுநோய் வல்லுநர்கள்.
பிற வர்ணங்களைவிடவும் கருப்புநிற சாயங்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப்பொருட்கள் அதிகம் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment