நாசா விஞ்ஞானிகள் ஒரு புதிய ஆராச்சியில் வெற்றி கண்டுள்ளனர். அதாவது ஒரு பொருள் உந்துதல் சக்தியால் மட்டுமே முன்னோக்கி நகர முடியும் என்ற அடிப்படை இயற்பியல் விதியை முறியடிக்கும் வகையில் இயற்பியல் விதிகளுக்கு மாறாக சூரிய சக்தியின் மூலம் உண்டாக்கப்படும் மைக்ரோவேவ்ஸ்களை கொண்டு இயங்கும் ரொக்கெட் இயந்திரத்தினை வடிவமைத்துள்ளனர்.
‘இம்பாசிபிள்’ என்ற புதிய வகை தொழில்நுட்பத்திலான ரொக்கெட் இயந்திரத்தினை வடிவமைத்து, அதன் ஓட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இதனை இம்பாசிபிள்’ விண்வெளி பொறி வேலை என்று குறிப்பிட்டுள்ளது.
நாசா ஆராய்ச்சியாளர்கள் “சாத்தியமில்லாத”விண்வெளி பயண தொழில்நுட்பம் குறித்து ஒரு புதிய ஆதாரத்தினை முன்வைத்துள்ளனர். அத்துடன் உண்மையில் அவ்வாறு செய்ய முடியும் என்றும் நிரூபிக்க முற்படுகின்றனர். இந்த கண்டுபிடிப்புக்கான ஆய்வுகள் வெறும் எட்டு நாட்களை அடிப்படையாக கொண்டவை எனவும் இன்னும் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் நாசா கூறியுள்ளது.

0 comments:
Post a Comment