சீனாவில் உள்ள ஒரு தொழிலதிபர் குடிபோதையில் இருந்ததால், தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்ல உதவுமாறு இளம்பெண் ஒருவரை அவர் கேட்டுக்கொண்டார். அந்த இளம்பெண்ணும் தொழிலதிபருக்கு உதவி செய்வதாக கூறினார்.
எனினும், மறுநாள் காலை தொழிலதிபர் விழித்தபோது அனைத்தையும் இழந்து நிர்வாணமாக அவர் குப்பைத் தொட்டிக்கு அருகே இருந்ததால் அவர் பெரும் அதிர்ச்சியடைந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
சீனாவில் உள்ள ஷாங்காய் என்ற நகரத்தில் பிரபல தொழிலதிபாரான 51 வயதுடைய Ling Fu, இரவு நேரம் ஸ்டார் ஓட்டலில் உள்ள மதுசாலைக்குச் சென்று தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
அளவுக்கு மீறி குடித்துவிட்டதால் நிதானம் இழந்துவிட்டார். அவரால் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அந்த மதுசாலைக்கு வந்திருந்த ஒரு இளம்பெண்ணிடம் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல உதவி செய்தால் பணம் தருவதாக கூறியுள்ளார்.
அந்த இளம்பெண்ணும் அதற்கு இணங்க, தொழிலதிபரின் காரில் அவரை ஏற்றி அழைத்து சென்றார். செல்லும் வழியில் காரிலேயே Ling Fu போதை அதிகமானதால் நினைவிழந்தார்.
மறுநாள் காலை Ling Fu கண்விழித்து பார்க்கும்போது தான் ஒரு குப்பைத்தொட்டியின் அருகில் கிடப்பதை உணர்ந்தார். அதுமட்டுமின்றி அவர் நிர்வாணமாகக் கிடப்பதையும் உணர்ந்துள்ளார். அவர் அணிந்திருந்த துணி, செல்போன், கடன் அட்டை, உள்ளாடை முதல் அனைத்தையும் அந்த இளம்பெண் திருடிக்கொண்டு தன்னை குப்பைத்தொட்டி அருகில் போட்டுவிட்டு சென்றதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அந்த குப்பைத்தொட்டியில் உள்ள ஒரு அட்டையை எடுத்து தனது நிர்வாணத்தை மறைத்துக் கொண்டு அருகில் இருந்த காவல்நிலையத்திற்கு சென்று முறையிட்டுள்ளார்.
முதலில் யாரோ பிச்சைக்காரன் என நினைத்த போலீசார் பின்னர் அவர் தொழிலதிபர் என்பதை அறிந்து அவருக்கு உடை மற்றும் உணவு கொடுத்து பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் உள்ளாடை முதல் திருடிக்கொண்டு சென்ற மர்ம இளம்பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

0 comments:
Post a Comment