சார்மியை பெண் கேட்டு மாப்பிள்ளைகள் கியூவில் நிற்கின்றனர்.‘காதல் அழிவதில்லை, ‘லாடம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் சார்மி. பிறகு தெலுங்கு படங்களில் நடித்தார். கடும்போட்டி காரணமாக வாய்ப்பிழந்தவர் இந்திக்கு தாவினார். ஆனால் ஒன்றிரண்டு படங்களோடு ஓரம் கட்டப்பட்டார்.
மீண்டும் தெலுங்கு படங்களில் விட்ட இடத்தை பிடிக்க முயன்றார். ஆனால் எதிர்பார்த்த பலன் இல்லை. இந்நிலையில் குடும்பத்தினர் சார்மிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதுபற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிந்தது.
அடுத்தடுத்து அவரது வீட்டுக்கு உறவினர்கள் பெண் பார்க்க வருவதும் போவதுமாக உள்ளனர். இவர்களில் ஐதராபாத்தை சேர்ந்தவர்களும் பலர் பெண் கேட்டு சென்றனர்.
பஞ்சாபியான சார்மியை அவரது உறவுக்காரர்களும் பெண் கேட்டு படையெடுத்துள்ளனர்.சார்மிக்கு இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்று கூறப்படுகிறது.
பெற்றோரிடம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி திருமணத்தை தள்ளிப்போட முயல்கிறார். முன் பின் தெரியாத ஒருவரை மணந்துகொண்டு வாழ்க்கையை ஆரம்பிப்பது கடினம் என்று அவர் எண்ணுகிறார்.
சில நாள் பழகிய பின்னர் குணம் தெரிந்துகொண்டு மணப்பதுதான் நல்லது என்று நினைக்கிறார். ஆனால் இதுவரை யாரையும் அவர் காதலித்ததாகவும் தெரியவில்லை. ‘படங்களை ஒப்புக்கொள்வதற்கே பலமுறை யோசிக்கும் சார்மி அவ்வ ளவு சீக்கிரத்தில் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டுவது கஷ்டம்தான் என்று அவரது நெருங்கிய தோழிகள் சொல்கின்றனர்.

சார்மிக்கா வரிசையில் நிற்கும் பாப்பிள்ளைமார்!
ReplyDelete